இரவில் சாலையில் ரோந்து சென்ற கரடியார்.!! அச்சத்தில் ஊர்மக்கள்.!!

x

இரவில் சாலையில் ரோந்து சென்ற கரடியார்.!! அச்சத்தில் ஊர்மக்கள்.!!


நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், கரடி ஒன்று இரவு நேரத்தில் சாலையில் உலா வந்தது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், குன்னூரிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில், கிருஷ்ணாபுரம் பகுதியில், இரவு நேரத்தில் கரடி ஒன்று உலா வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இந்நிலையில், இரவு நேரங்களில் உலா வரும் கடிகளை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்