7 வயது சிறுவனுக்கு அத்தையால் நேர்ந்த பயங்கரம்...தம்பி மீதுள்ள பொறாமையால் அக்கா வெறிச் செயல்...

x

கோவை - சூலூர்

தம்பி மீது அக்காவுக்கு ஏற்பட்ட பொறாமை...

சொந்த மருமகனை கொன்ற கொடூர அத்தை...

7 வயது சிறுவனுக்கு அத்தையால் நேர்ந்த பயங்கரம்...

தம்பி மீதுள்ள பொறாமையால் அக்கா வெறிச் செயல்...

நாம பாத்து வேலைக்கு சேத்து விட்டவங்க நமக்கு மேல வளந்துட்டா, பலராலும் அதை பொருத்துக்க முடியாது. இங்கயும் அப்படி தொடங்கிய ஒரு பொறாமை குணம் கடைசியில் ஒரு கொலையில் முடிஞ்சிருக்கு.

சொந்த பந்தங்கள் சில நேரங்கள்ள நமக்கு உதவி செஞ்சா கூட, அது அவங்களோட தற்பெருமைகாக இருக்குமே தவிர நாம நல்லா இருக்க இல்லனு சொன்ன சினிமா காட்சி இது..

இந்த காட்சியில் வரும் வசனத்திற்கு சாட்சியாக அரங்கேறி இருக்கிறது இங்கே ஒரு கொடூரம்..

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ளது கலங்கள் பகுதி. பகல் முழுக்க பெரும் இறைச்சலோடு இயங்கிக் கொண்டிருக்கும் பஞ்சாலை பகுதி அது.

அன்று இரவு ஒற்றை அழுகுரல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.

மலை கருக்கல் வரை நண்பர்களோடு துள்ளிக் குதித்து ஓடி விளையாடிய 7 வயது சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.

சம்பவ இடத்திற்கு வந்திருந்த போலீசார் சடலத்தை பரிசோதித்து பார்த்த போது அந்த சிறுவன் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

பிரேத பரிசோதனைகாக சடலத்தை அனுப்பி வைத்த போலீசார், அங்கிருந்தவர்களிடம் விசரானையை தொடங்கி இருக்கிறார்கள்.

கொல்லப்பட்டவர் கைரோல் இஸ்லாம். இவரது தந்தை ஜாகிர் உசேன். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், குடும்பத்தோடு தங்கி பஞ்சாலையில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

அங்கிருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நூறு ஜா கத்துன்

என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இவர் வேறு யாருமில்லை. இறந்து போன சிறுவனின் சொந்த அத்தை, ஜாகிர் உசேனின் உடன் பிறந்த அக்கா.

நூறு ஜா கத்துனின் முன்னுக்கு பின் முரணான பதில் போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை அதிகரிக்க, அவரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்திருக்கிறார்கள். அப்போது தான் சொந்த தம்பியின் மகனை துடிக்க துடிக்க கழுத்தை நெரித்துக் கொன்ற பயங்கரத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்த கொடூரத்தை செய்ததற்கு காரணம் தம்பி மீது ஏற்பட்ட பொறாமை.

முதன் முதலாக இந்த மில்லில் வேலைக்குச் சேர்ந்தவர் நூறு ஜா கத்துன் தான்.

அதன் பிறகு தான் ஊரில் வேலை இல்லாமல் இருந்து தனது தம்பியை இங்கு வேலைக்கு அழைத்து வந்திருக்கிறார்.

மில்லில் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் நேரம் காலம் பார்க்காமல், வேலை செய்த ஜாகிர் உசேன், வெகு சீக்கிரமே முதலாளியின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

இதனால் ஜாகிர் உசேனை தனியாக கவனித்துக் கொண்ட மில் ஓனர், அவர் தங்கவதற்கு வீட்டு வசதியையும் செய்து கொடுத்திருக்கிறார்.

இந்த அபரிவிதமான வளர்ச்சி தான் அக்கா நூறு ஜா கத்துனின் கோவத்திற்கும் காரணமாக மாறி இருக்கிறது.

நாளடைவில் அந்த பொறாமை குரோதமாக மாற இருவருக்கும் அடிக்கடி மோதல் வெடித்திருக்கிறது.

சம்பவம் நடந்த அன்று, கைரோல் இஸ்லாம் நண்பர்களோடு விளையாடுவதை பார்த்திருக்கிறார் நூறு ஜா கத்துன். அந்த குழந்தையின் சிரித்த முகம் அவருக்கு கொலைவெறியை தூண்டி இருக்கிறது.

சிறுவனை தனியாக அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார்.

என்ன நடக்கிறது, ஏன் சாகிறோம் என்பது கூட தெரியாத அந்த பிஞ்சு உயிர் மாலை சூரியனோடு சேர்ந்து மறைந்து போயிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், நூறு ஜா கத்துனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்