பாதாள சாக்கடையில் வீசப்பட்ட பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை..! மானாமதுரை அருகே அதிர்ச்சி

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பாதாள சாக்கடையில் தூக்கி எறியப்பட்டு காயங்களுடன் கதறிக் கொண்டிருந்த பச்சிளங்குழந்தை காவல் துறையினரால் மீட்கப்பட்டது. கல்லறை தோட்டத்தின் அருகே செல்லும் பாதாள சாக்கடையில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது. பசியாலும் காயத்தாலும் கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருந்தது. அவ்வழியே சென்ற நபர் ஒருவர் குழந்தையின் அழுகுரல் கேட்டு காவல்துறைக்குத் தகவல் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து சாக்கடையில் வீசி சென்றவர்களை தேடி வரும் போலீசார் அந்த குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்