5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. கிராம பஞ்சாயத்தின் தீர்ப்பால் அதிர்ச்சி |வீடியோ வெளியாகி பரபரப்பு

x

பீகாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு தண்டனையாக 5 தோப்புக்கரணம் போட வைத்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவாடா மாவட்டத்தில் உள்ள கண்ணூஜ் கிராமத்தில் கோழி பண்ணை வைத்துள்ளவர் அருண் பண்டித். இவர், தனது பண்ணையில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தண்டனை வழங்கிய கிராம பஞ்சாயத்து, குற்றம் சாட்டப்பட்ட நபரை 5 தோப்புக்கரணம் போட வைத்துள்ளது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்