32 வயது பெண்ணிற்கு பொறுத்தபட்ட 15 வயது சிறுமியின் இதயம்..இறந்தும் 6 பேரை காப்பாற்றிய ஓர் இதயம்

x

டெல்லியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனையில் முதல் முறையாக 32 வயது பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் மாற்று இதயம் பொறுத்தப்பட்டது. அடல் பிகாரி வாய்பாயி மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற 6 மணி நேர அறுவை சிகிச்சையில் பெண்ணிற்கு மாற்று இதயம் பொறுத்தப்பட்டது. இது குறித்து பேசிய, அறுவை சிகிச்சை மேற்கொண மருத்துவர்களில் ஒருவரான விஜய் குரோவர், மாற்று இதயம் பொறுத்தப்பட்ட பெண், 8 ஆண்டுகளாக இதய பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகவும், இனி அவர் நலமுடன் வாழ முடியும் என்றார். மேலும், கார் விபத்தில் படுகாயமடைந்த 15 வயது சிறுமியின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் 32 வயது பெண் உட்பட 6 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்