15 வயது சிறுமிக்கு பாலியல் டார்ச்சர்.. சிக்கிய 6 பேர் - கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 6 பேர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி கடைக்குச் சென்ற போது வழிமறித்த அந்த கும்பல், ஆபாச வார்த்தைகள் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது குறித்து சிறுமியின் அக்கா மற்றும் மாமா கேட்ட போது, அவர்கள் மீது அந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 5 பேரை கைது செய்து, தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com