"ஆத்தி, எத்ததண்டி..!" வீட்டிற்குள் புகுந்த 14 அடி கருநாகம்..பிடிக்க முயன்றவரை கடிக்க பாய்ந்த பாம்பு

x

கர்நாடக மாநிலம், மெலந்தப்பட்டு கிராமத்தில் வீட்டிற்குள் புகுந்த 14 அடி கரு நாகப்பாம்பு பிடிபட்டது. சசிராஜ் என்பவரது வீட்டின் பின்புறம் சுமார் 14 அடி நீளம் உள்ள கருப்பு நிற ராஜ நாகம் ஒன்று எதையோ வாயில் விழுங்கிய படி கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ந்து போன அவர் உடனடியாக பாம்பு பிடி நிபுணர் அசோக்குமார் என்பவருக்கு தகவல் அளித்தார். இதை தொடர்ந்து அங்கு வந்த பாம்பு பிடி நிபுணர் அசோக் குமார், பாம்பை பிடிக்க முயன்ற போது இரண்டு முறை தாக்க முயன்றது. பின்னர் பாம்பை பிடித்த அசோக்குமார் அதை பத்திரமாக வனப்பகுதியில் விட்டார்.


Next Story

மேலும் செய்திகள்