சென்னையில் கணித தேர்வுக்கு பயந்து 10ம் வகுப்பு மாணவி விபரீத முடிவு

x

சென்னை, மணலியில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

மணலி ஹரி கிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி ராஜஸ்ரீ. இவர் மணலி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், அரசு பொதுத்தேர்வு எழுதி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், மாணவி தன்னை கணித பாடத்தில் பலவீனமாக எண்ணியதாக கூறப்படுகிறது. இதனால், பயத்தில் இருந்த மாணவி கணித தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்