9 ஆண்டுக்கு முன் மாயமான மனைவி.. கணவன் நிகழ்த்திய பயங்கரம் - விசாரணையில் பகீர்

x

புதுச்சேரியில், 9 வருடங்களுக்கு முன்பு மனைவியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து புதைத்த ரவுடி கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியை சேர்ந்த ரவுடி பாஸ்கர் என்பவரின் மனைவி எழிலரசி, கடந்த 2013ம் ஆண்டு மாயமான நிலையில், 9 ஆண்டுகளாக அவரை போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே, எழிலரசியின் கணவரான பாஸ்கரிடம், போலீசார் தங்களது பாணியில் விசாரணை மேற்கொண்ட போது, கடந்த 2013 ஆம் ஆண்டு, மனைவியின் நடத்தையின் மீதான சந்தேகம் காரணமாக, நண்பர்களான பிரகாஷ், கருப்பு சரவணன், பாம் வேலு ஆகியோருடன் சேர்ந்து, மனைவியை கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாகவும், பின்னர், வேல்ராம்பட்டு ஏரிக்கரை அருகே உடலை புதைத்ததாக அவர் தெரிவித்தார்.

கடந்த 3 மாதங்களாக அந்த இடத்தில் புறவழிச் சாலை பணிகள் நடந்து கொண்டிருந்ததால், எழிலரசியை புதைத்த இடத்திற்கு சென்று, அவரது எலும்பு கூடுகளை மீட்டு, பாஸ்கர் ஏரிக் கரையில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்