பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனைகள்..143 பக்கங்களுடன் புத்தகம் வெளியீடு

x

மத்தியில் தொடர்ச்சியாக 2-வது முறை ஆட்சி புரிந்து வரும் பாஜக, 9 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளது. கடந்த 9 ஆண்டு காலத்தில் நாட்டின் முன்னேற்றத்துக்காக பாஜக செய்த பணிகளை பட்டியலிட்டு, 143 பக்கங்களுடன் புத்தகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், பியூஷ் கோயல், அஸ்விணி வைஷ்ணவ், அனுராக் சிங் தாக்குர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய அரசின் சாதனை விவரங்களை புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டார். குறிப்பாக கொரோனா தடுப்பூசி விநியோகம், வந்தே பாரத் ரெயில் சேவைகள், ஏழைகளுக்கு வீடுகள் போன்றவை பற்றி எடுத்துரைத்தார். கடந்த 9 ஆண்டுகால சாதனைகளை நாடு முழுவதும் மக்களிடையே கொண்டுசெல்லும் பணியை பாஜகவினர் தொடங்கி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்