இன்றைய தலைப்பு செய்திகள் (20-04-2023) | 9 PM Headlines

x

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இன்று அங்கீகரித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் என ஈபிஎஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்...

முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு...

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் சந்தேக பட்டியலில் உள்ள 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. இறுதி நாளில் பல்வேறு முக்கிய வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்