இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (08-07-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வேளாண் சட்டங்கள் மூலம் பாஜக அரசு விவசாயிகளுக்கு விரோதமாக செயல்பட்டது...

சென்னை நந்தம்பாக்கத்தில் வேளாண் வணிகத் திருவிழாவை தொடங்கி வைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று விமர்சனம்...

மகளிர் உரிமைத்தொகை திட்டம் நடைமுறைக்கு வருமா? என்பதே சந்தேகமாக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் இன்று விமர்சனம்...

80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து...

திட்டம் செயலாக்கம் தொடர்பாக ஜூலை மூன்றாவது வாரத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு...

தற்கொலை செய்துகொண்ட டிஐஜி விஜயகுமார், மன அழுத்தம் தொடர்பாக சக காவலர்களுடன் ஆலோசித்ததாக விசாரணையில் தகவல்...

மன அழுத்த‌த்தில் உள்ள போலீசாரை கண்டறிந்து மனநல ஆலோசனை வழங்க காவல்துறை இன்று முடிவு...

ரயில்களில் ஏ.சி. இருக்கை மற்றும் எக்ஸ்க்யூட்டிவ் வகுப்புகளுக்கான கட்டணம் 25 சதவீதம் வரை குறைப்பு...

'வந்தே பாரத்' உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் அமல்படுத்தப்படும் என இந்திய ரயில்வே இன்று அறிவிப்பு...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சந்திப்பு....

செந்தில்பாலாஜி விவகாரம், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்கு விசாரணை உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை....

மேற்குவங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் இன்று வன்முறை வெடித்ததால் பதற்றம்...

10க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி குற்றச்சாட்டு...


Next Story

மேலும் செய்திகள்