இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (02-07-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

உடைந்தது தேசியவாத காங்கிரஸ்

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணியில் ஆதரவு

எம்.எல்.ஏ.க்களுடன் இன்று இணைந்தார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார்...

துணை முதலமைச்சராக பதவியேற்பு...

பிரதமர் மோடி மீது தேசியவாத காங்கிரஸ் தலைவர்

சரத்பவார் பரபரப்பு குற்றச்சாட்டு...

புதிய உச்சத்தில் தக்காளி விலை

தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை

விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி...

இமாச்சல் மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து தொடங்கிய உடன் விலை குறையும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தகவல்...

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பது தொடர்பாக, அமைச்சர் பெரிய கருப்பன் நாளை ஆலோசனை...

"கர்நாடக முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்"

எம்.பி.க்களுடன் டெல்லி சென்று, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக முயற்சிகளை முறியடிக்க வேண்டும்...

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வலியுறுத்தல்...

கை அகற்றம் - சிகிச்சையில் அலட்சியம்?

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், தவறான சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு...

தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று உறுதி...

"ஜூலை 6 வரை மழைக்கு வாய்ப்பு"

தமிழகத்தில் வரும் 6ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தகவல்...

நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை...


Next Story

மேலும் செய்திகள்