9 மணி நேரம்...56 கேள்விகள் - அரவிந்த் கெஜ்ரிவாலை துளைத்தெடுத்த சிபிஐ

x


டெல்லி மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் 9 மணி நேரத்துக்கும் மேலாக சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த வழக்கில், ஊழல் நடந்ததாக விசாரணை அதிகாரிகள் கூறிய நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் சாட்சியாக விசாரிக்கப்பட்டார். நேற்று நடைபெற்ற இந்த விசாரணைக்கு பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதுபான கொள்கை தொடர்பான 56 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் சிபிஐயிடம் எந்த ஆதாரமும் இல்லை எனவும் குறிப்பிட்டார். முன்னதாக, விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், கெஜ்ரிவாலின் வளர்ச்சியை கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது என, அக்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்