ரூ.800 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு.. நடவடிக்கை கோரி திரண்டவர்களால் பரபரப்பு

x

ரூ.800 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு.. நடவடிக்கை கோரி திரண்டவர்களால் பரபரப்பு


தஞ்சையில் பிரபல டிராவல்ஸ் நிறுவனத்தில் இணைந்த தங்களிடம் 800 கோடி ரூபாய் பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருச்சி மன்னார் புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிராவல்ஸ் நிறுவனம் பங்குதாரர்களிடம் தலா 5 லட்ச ரூபாய் வீதம் முதலீடுகளை பெற்றது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக 150க்கும் மேற்பட்ட பேருந்துகள், கார்கள் உள்ளிட்டவை உள்ள நிலையில் முதலீட்டாளர்களுக்கான ஈவுத் தொகையை முறையாக வழங்கவில்லை என தெரிகிறது. முதலீடு செய்த பணத்தையும் அவர்கள் தராததால் பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்தனர். டிராவல்ஸ் நிறுவனமானது சுமார் 800 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாகவும் தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்