வாடிக்கையாளர்களில் 80% பேர் சிறு நகரத்தினர் - அமேசான் தீபாவளி விற்பனை அதிகரிப்பு

x

அமேசான் இந்தியா நிறுவனத்தின் வருடாந்திர பண்டிகை விற்பனை விவரங்களை, அதன் துணைத்தலைவர் மணீஷ் திவாரி வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தைவிட, இந்த ஆண்டில் இரட்டை இலக்க அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது.

பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதன்முதலில் அமேசான் மூலம் செல்ஃபோன் வாங்கியுள்ளனர் என்றும்

இதில் 80 சதவீதம் பேர் நடுத்தர விலை செல்ஃபோன்கள் வாங்குவதிலேயே ஆர்வம் காட்டியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், 47 சதவீதம் பேர் கிரெடிட் கார்டு மூலம், பொருள்களை வாங்கியுள்ளனர்.

பதினைந்து லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் அழகுபொருள்கள், புதுமை ஃபேஷன் பொருள்களை வாங்கியுள்ளனர் என்றும் அவர்களில் 85 சதவீதம் பேர் சிறு நகரங்கள், தொலைதூர ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்