சென்னைக்கு 8 மெகா அதிரடி அறிவிப்புகள்

x

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட புதிய அறிவிப்புகளில், சென்னைக்கான அறிவிப்புகள் என்னென்ன என்பதை தற்போது காணலாம்...

சென்னையில் மாநகராட்சி பள்ளிக் கட்டடங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் எனவும்,

சென்னையில் உள்ள 4 மண்டலங்களில் 20 கோடி ரூபாய் மதிப்பில் நீர் நிலைகள் புனரமைக்கப்படும் எனவும்,

30 கோடி ரூபாய் செலவில் 50 பூங்காக்கள் மற்றும் 10 விளையாட்டு திடல்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

மேலும் சென்னையில் 15 இடங்களில் 25 கோடி ரூபாய் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும் எனவும்,

குப்பை சேகரிக்கும் பணியினை துரிதப்படுத்த 6 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பில் 350 பேட்டரி வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும் எனவும்,

சென்னை மாநகராட்சி பணிமனைகளில் 5 கோடி ரூபாய் மதிப்பில் பிரதான கழிவுநீர் குழாய்கள் மேம்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தெல்காப்பியா பூங்கா 42 கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் எனவும்,

கொளத்தூர், சேப்பாக்கம், துறைமுகம், எழும்பூர் பகுதிகளில் 20 கோடி ரூபய் செலவில் கழிவுநீர் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்