கத்தாரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கைது... பாக்.சதியா? - உற்று நோக்கும் இந்தியா

x

கத்தார் படைகளுக்கு பயிற்சி வழங்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேர் கத்தாரில் சிறையில் உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து எந்த தகவலையும் கத்தார் அரசு மத்திய அரசிடம் வழங்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் கத்தார் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விஷயத்தில் இந்தியர்களுக்கு அனைத்து விதமான சட்ட உதவிகளையும் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த வழக்கில் கத்தாரில் மார்ச் 29 ஆம் தேதி விசாரணை தொடங்கும் நிலையில், விவகாரத்தை இந்திய முகமைகள் தீவிரமாக கண்காணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்தார் அரசு தன்னுடைய நிலையிலிருந்து இறங்கவில்லை எனவும் இந்தியர்களுக்கு எதிரான வழக்கில் பாகிஸ்தான் உளவு அமைப்பின் சதி வலை இருக்கலாம் எனவும் பாதுகாப்பு வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்