குடியரசு தின விழாவில் உலகுக்கே பவரை காட்டிய இந்தியா - வீறுநடை போட்ட குடியரசு தலைவர், பிரதமர்

x

நாட்டின் 74-வது குடியரசு தினவிழா டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, கலர்புல் ராஜஸ்தான் தலைப்பாகையுடன் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அங்கு வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வரவேற்றார்.

குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் எல்.சிசி பங்கேற்றார்

விழாவில் தேசிய கீதம் இசைக்க, 21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...

வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர் தேசியக் கொடிக்கு மலர்தூவி மரியாதை செய்தது.

இந்தியாவின் ராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாக முப்படை கம்பீர அணிவகுப்பு கடமைப் பாதை அணிவகுத்தது... ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு காண்போரை சிலிர்க்க செய்தது

குடியரசு தலைவர் முர்மு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மிடுக்கான துணை ராணுவப் படைகள் அணிவகுப்பு, பிரமிப்பூட்டும் பிரமாண்ட ராணுவ வாகனங்கள், ஒய்யாரமான ஒட்டக அணிவகுப்பு காண்போரை கவர்ந்தது

குதிரைப்படை, ராணுவ இசைக்குழு, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது

17 மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாட்டை பறைசாற்றும் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு வியக்கச் செய்தது

அணிவகுப்பில் சங்க காலம் முதல் தற்காலம் வரை பெண்களின் பங்களிப்பை விளக்கும் வகையில் தமிழ்நாடு கலாச்சார ஊர்தி மிதந்தது. ஊர்தியில் அவ்வையார், வேலுநாச்சியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி உருவங்களுடன் தஞ்சை பெரிய கோயிலும் இடம்பெற்றன

விழாவில் நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகளை உற்சாகத்துடன் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

ராணுவ வீரர்களின் பைக் சாகசம், வான் சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தது

சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார்

மெரினா சாலையில் முப்படை வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். முப்படைகளின் வலிமையை விளக்கும் வகையில் ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெற்றது.

தமிழக அரசு துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றன

தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்துடன் முதலாவதாக பவனி வந்தது செய்தித்துறை வாகனம்

விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு பதக்கங்களும் வழங்கி கவுரவித்தார், முதலமைச்சர் ஸ்டாலின்

விழாவில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என கலைநிகழ்ச்சிகள் களைகட்டியது

பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி கண்களை கவர்ந்தது

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடாடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்