70 வருடம் இசை பயணம்.. மாத வருமனம் இல்லை.. ஊக்கத்தொகை கேட்கும் நாதஸ்வர கலைஞர் | Mayiladuthurai

மத்திய அரசு சார்பில் வழங்கப்படவுள்ள அமிர்த விருது, தமிழகத்தைச் சேர்ந்த நாதஸ்வர கலைஞரான சின்னத்தம்பி பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், ஆச்சாள்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி பிள்ளை 13 வயதில் தனது கலைப்பயணத்தை தொடங்கினார். இவரது 70 ஆண்டு கால இசைப்பயணத்தை பாராட்டும் வகையில் அமிர்த விருதும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்படவுள்ளது. நலிந்த கலைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com