7 மணி தலைப்பு செய்திகள் (20-03-2023)

x

இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பிரதமர் மோடியுடன் சந்திப்பு....சர்வதேச சவால்களை இரு நாடுகளும் எதிர்கொள்வது குறித்து விவாதிப்பதாக தகவல்...

சென்னையில் உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் திருட்டு...வீட்டு வேலைக்காரர்கள் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார்...

பத்திரப் பதிவுக்கட்டணம் 4ல் இருந்து 2 சதவிகிதமாக குறைக்க அரசு தமிழக அரசு முடிவு....நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க நடவடிக்கை....

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை நிறைவு....எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு ஏற்பு.....

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி....தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மரியாதை....தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...

அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்நாள் முழுக்க உதவி செய்யப் போகும் பல்வேறு நலத்திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன


Next Story

மேலும் செய்திகள்