Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24.06.2025) | 6AM Headlines | ThanthiTV

x
  • ஈரான், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் போரை நிறுத்திக்கொள்ள ஒப்புதல்... 12 நாள் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு...
  • 6 மணி நேரத்திற்குள் இரு நாடுகளும் கடைசி தாக்குதலை முடித்துக்கொள்வார்கள்... அடுத்த 24 மணி நேரத்தில், இஸ்ரேல், ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் என டிரம்ப் பதிவு...
  • இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் பல ஆண்டுகள் நீடித்து, மத்திய கிழக்குப் பகுதியை அழித்திருக்க‌க்கூடியது... ஆனால், அது நடக்கவில்லை, கடவுள் ஆசீர்வதிப்பாராக... என்று டிரம்ப் நெகிழ்ச்சி...
  • கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல்-உதைத் விமானப் படை தளத்தை குறிவைத்து இரவில் ஏவுகணைகளை ஏவிய ஈரான்... ஈரானின் அணு உலைகளை குறி வைத்து, அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி...
  • கத்தார் தலைநகர் தோகா வான்வெளியில் சீறிப்பாய்ந்த ஏவுகணைகள்... பதறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்...
  • அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதலுக்கு 'ஆபரேஷன் பஷாரத் அல்-பாத்' (BASHARAT AL-FATH OPERATION) என பெயரிட்டுள்ள ஈரான்.. தமிழில் வெற்றியின் நற்செய்தி என அர்த்தம்...
  • அமெரிக்க ராணுவ முகாமை நோக்கி வந்த ஈரானின் ஏவுகணைகளை, வெற்றிகரமாக நடுவானிலேயே இடைமறித்து அழித்த‌தாக கத்தார் அறிவிப்பு... கத்தாருக்கு வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டம்...
  • சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு வழங்கும் ஒத்துழைப்பை ரத்து செய்ய ஈரான் நாடாளுமன்றத்தில் ஒப்புதல்... அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத‌தால் அதிரடி...
  • போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது... போதை பொருள் பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் உறுதியானதை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் நடவடிக்கை...
  • நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு... நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல் எனவும் விமர்சனம்...

Next Story

மேலும் செய்திகள்