Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-01-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-01-2023) | Morning Headlines | Thanthi TV
x

இன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி, சுற்றுலா தலங்களில் குவியும் மக்கள்...

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது...அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்...

களை கட்டிய மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு... உற்சாக கொண்டாட்டத்துடன் நிறைவு...

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் வெற்றியாளராக தமிழரசன் தேர்வு...முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசு பெற்றார்...

சிறந்த காளை உரிமையாளர்களுக்கு பைக் பரிசு...முதல் சிறந்த காளை கருப்பண்ணசாமி கோயில் காளை... திண்டுக்கல் ரமேஷ் காளை 2வது பரிசுக்கு தேர்வு...

கரூர் மாவட்டம் ஆர்.டி. ம​லைப் பகுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி...800 மாடுகள் மற்றும் 400 வீரர்கள் களம் இறங்குகின்றனர்...

உறியடித்து மகிழ்ந்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா...

இன்று மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள்...சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சியினர் மரியாதை செலுத்துகின்றனர்...

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு பங்கேற்பு...ஈபிஎஸ் தரப்பு புறக்கணிப்பு என தகவல்...

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...பெரியப்பா மு.க.அழகிரியிடம் ஆசி பெற்றார் உதயநிதி...

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா, ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிகள் மோதல்...122 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி...



Next Story

மேலும் செய்திகள்