68 வது தேசிய திரைப்பட விருதுகள் -இன்று குடியரசு தலைவர் விருதுகளை வழங்கி கௌரவிப்பு

x

68 வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று வழங்கப்படுகிறது. விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்த நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். தமிழில் "சூரரைப் போற்று" படத்துக்கு ஐந்து விருதுகளும், "சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" என்ற படத்துக்காக 3 விருதுகளும் மற்றும் "மண்டேலா" படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. இதில் நடிகர் சூர்யா, நடிகை அபர்ணா பால முரளி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர் சுதா கொங்குரா, பாடகி நஞ்சம்மா உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்