30 நிமிடத்தில் 65 செய்திகள்.. காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (25.05.2023)

x

3 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார். ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்றார். இன்று அதிகாலை இந்தியா திரும்பிய பிரதமர் மோடியை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். தேசிய கொடியுடன் திரண்ட தொண்டர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆஸ்திரேலிய மக்களுக்கும், ஆஸ்திரேலிய அரசுக்கும், அந்நாட்டு பிரதமரும், தனது நண்பருமான அந்தோணி ஆல்பனீசுக்கும் நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உலகளாவிய நன்மைக்காகவும், இந்தியா-ஆஸ்திரேலியா நட்புறவை வலுப்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பணியாற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆல்பனீசுடனான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக பதிவில் கூறியுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. அதில் குடியரசுத் தலைவரை ஒதுக்கி வைத்துவிட்டு, நாடாளுமன்ற கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு குடியரசு தலைவருக்கு அவமானம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என விமர்சனம் செய்துள்ளன.

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் பிஜு ஜனதா தளம் கட்சி பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார். இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புத் திட்டத்தை பிஜு ஜனதா தளம் நிராகரித்துள்ளது. அத்துடன், குடியரசு தலைவர் பதவி மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டும் புனிதமானவை என்றும், பிரச்சனைகள் பின்னர் விவாதிக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்