"என் வண்டி கவுந்திருச்சு..போக பயமா இருக்கு" 6 ஆண்டாக முடியாத பகிங்ஹாம் கால்வாய் பணி

ஆறு ஆண்டுகளாகியும் முடிக்கப்படாத சென்னை திருவொற்றியூர் - மணலியை இணைக்கும், பகிங்ஹாம் கால்வாய் மேம்பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x

திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க... நெஞ்சாலைத்துறை கையில் எடுத்த திட்டம் தான் இந்த பக்கிங்காம் கால்வாய் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே 530 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலப் பணி, 52 கோடி செலவில் தொடங்கப்பட்டு விட்ட நிலையில், 2018 ஆண்டே இந்த திட்டம் முடிந்திருக்க வேண்டும்.

ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பணி இதுவரை முடிவடையவில்லை. இதனால் திருவொற்றியூரில் இருந்து மணலி, மாதவரம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் மாநகர பேருந்து, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பக்கிங்காம் கால்வாய் ஓரம் அமைக்கப்பட்டுள்ள சாலை வழியாக சுமார்

8 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனால் கால விரயம் மற்றும் அலைச்சலுக்கு வாகன ஓட்டிகள் ஆளாக நேரிடுகிறது.


Next Story

மேலும் செய்திகள்