ஓடும் காரில் பாட்டியை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுமி | America | Gun Shot

x

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 6 வயது சிறுமி தனது பாட்டியை தவறுதலாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் சென்று கொண்டிருந்த போது பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி, இருக்கைக்கு அருகில் இருந்த துப்பாக்கியை எடுத்து அழுத்திய போது தவறுதலாக ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமியின் பாட்டியின் முதுகில் குண்டு பாய்ந்தது. நல்வாய்ப்பாக அந்த மூதாட்டி உயிர் பிழைத்த நிலையில், காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்