"காஃபித்தூளில் கலப்படம் செய்தவருக்கு 6 மாதம் சிறை"

x

கலப்பட காபி தூளை விற்பனை செய்தவருக்கு கர்நாடக நீதிமன்றம் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் செலக்ட் காபி தூளில், கலப்படம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. உணவுத்தரக் கட்டுப்பாட்டுத் துறை சோதனையில், கலப்படம் உறுதியானது.

காஃபித் தூளில், குறைந்தபட்சம் 0.6 சதவீதம் காஃபினும் 50 சதவீதத்துக்குக் குறைவாக நீர்ச் சத்தும் இருக்கவேண்டும்.

ஆனால் செலக்ட் காஃபித் தூளில் 0.4 சதவீதம் காஃபின், 55 சதவீதம் அளவுக்கு நீர்மப்பொருள்தான் இருந்தது.

வழக்கில், செலக்ட் காஃபி உரிமையாளர் சையதுவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் 6 மாதம் சிறைவாசமும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.


Next Story

மேலும் செய்திகள்