பேட்மிண்டன் போட்டியில் 6 தங்க பதக்கம் - அர்ஜுனா விருது பெற்ற மாணவி ஜெர்லின் அனிகா - சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

x

அர்ஜுனா விருது பெற்று சென்னை திரும்பிய கல்லூரி மாணவி ஜெர்லின் அனிகாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை வில்லாபுரம் பகுதியை சோ்ந்த வீராங்கனை ஜொ்லின் அனிகா.

மாநில, தேசிய மற்றும் சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்று 6 தங்க பதக்கங்களை பெற்ற, ஜெர்லின் அனிகா உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தேர்வாகினர்.

இந்நிலையில், டெல்லி நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு, விருதினை வழங்கி கவுரவித்தார்.

இதைடுத்து, விருதுடன் சென்னை வந்த மாணவிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்