காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-05-2023)

x

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு எந்த விதமான அசையா சொத்தும் கிடையாது....அமலாக்கத் துறையின் டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்படுவதாகவும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை விளக்கம்....

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் மேலும் 5 திமுகவினர் கைது...ஏற்கனவே 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் நடவடிக்கை...

கரூரில் இன்று 5ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது...நேற்று உணவகத்தில் நடந்த சோதனையின்போது, துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு...

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை...ஆசிரியர் முன்னேற்ற சங்க விழாவில், அமைச்சர் உதயநிதி பேச்சு

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை பேசி தீர்க்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் உறுதி...

போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்..தமிழக அரசுக்கு, தொழிற்சங்கத்தினர் கோரிக்கை...

400 ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனத்தை கண்டித்து, சென்னையில் நேற்று மாலை பேருந்துகள் திடீர் நிறுத்தம்...

ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 9 மாதங்கள் இருப்பதாக, தோனி பேட்டி....

சென்னை அணியின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்....


Next Story

மேலும் செய்திகள்