"2024 - இந்தியாவில் டேட்டா..." - நோக்கியா நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை

x
  • Five G (5ஜி) அலைபேசி சேவைகளினால், இந்தியாவில் அலைபேசி டேடா நுகர்வு, 2024க்குள் மூன்று மடங்கு அதிகரிக்க உள்ளதாக நோக்கியா நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
  • 2022இல் ஆயிரத்து 440 கோடி ஜிபியாக இருந்த மொத்த டேடா நுகர்வு, 2024இல் 4 ஆயிரத்து 370 கோடி ஜிபியாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.
  • 2022இல் இந்தியாவில் 7 கோடி Five G (5ஜி) அலைபேசிகள் விற்பனையாகியுள்ளதாக கூறியுள்ளது.
  • 2023 ஜூன் வரை இது 10 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்