வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 55 பழங்கால கற்சிலைகள் பறிமுதல் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்..!

x

சென்னை, ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் சிலை தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த 55 பழங்கால கற்சிலைகளை போலீசார் கைப்பற்றினர். இவைகள் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடமிருந்து வாங்கப்பட்டதும், அவர் மூலம் கடத்தப்பட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது. தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட சில சிலைகளையும் போலீசார் மீட்டு சென்னை கொண்டு வந்தனர். இவ்வாறு, மீட்கப்பட்ட சிலைகள் சென்னை, அசோக்நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மீட்கப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்