போலி ஆவணங்களை பயன்படுத்தி 55 ஆயிரத்து 982 சிம் கார்டுகள்... ரெடியான லிஸ்ட் - தட்டி தூக்க போகும் போலீசார்

x

தமிழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் பலர் சிம் கார்டுகளைப் பயன்படுத்தி வருவதாக சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதுதொடர்பாக விசாரணையை நடத்திய போலீசார், போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டு பெற்றவர்களின் விவரங்களை தயார் செய்தனர். அதனை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதுதொடர்பாக தரவுகளை ஆய்வு செய்ததில், 55 ஆயிரத்து 982 சிம் கார்டுகள் போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த சிம்கார்டுகளை முடக்கிய போலீசார், இதுதொடர்பாக 8 மாவட்டங்களில் சிம்கார்டு விற்பனை செய்யும் கடைகள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில், 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்