53 வது சர்வதேச திரைப்பட விழா - தங்கமயில் விருது பெறுமா 'குரங்கு பெடல்' திரைப்படம்

x

'குரங்கு பெடல்' தமிழ்ப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமயில் விருது பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, 'டேபிள் டாக்ஸ்' என்ற உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் குரங்கு பெடல் திரைப்படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன், நடிகர் காளி வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கமலக்கண்ணன், மிதிவண்டியின் மீது ஒரு தலைமுறைக்கு உள்ள உணர்வுப்பூர்வமான தொடர்பை விவரிக்கும் படமாக 'குரங்கு பெடல்' படம் இருக்கும் என்றார்.

ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட இப்படம், கோல்டன் பீகாக் பதக்கம் மற்றும் சிறுவர் நிதியத்தின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான காந்தி பதக்கம் ஆகிய இரு பிரிவுகளில் போட்டியிடுகிறது.


Next Story

மேலும் செய்திகள்