17 நிமிடத்தில் 33 செய்திகள்-காலை தந்தி எக்ஸ்பிரஸ்..!

x

கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை தேர்தெடுக்கும் அதிகாரத்தை, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரிடம் வழங்கி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தேர்தலில் வெற்றி பெற பாடுபட்ட, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தொண்டர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவரிடம் வழங்குவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக மாநில முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரை அறிவிக்க வேண்டும் என்றும், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவே அடுத்த முதலமைச்சர் என்றும், இரண்டு பேரின் ஆதரவாளர்களும் மாறிமாறி முழக்கங்களை எழுப்பினர்.

கர்நாடகாவில், அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பு நீடித்து வரும் நிலையில், இன்று கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே சிவகுமார் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு முதல்வர் பதவியை அறிவித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி அவரை மகிழ்விக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக யார் இருக்கிறாரோ அவர்தான் முதல்வராக பொறுப்பேற்பது வழக்கம். ஆனால், இது தனக்கு, கடைசி தேர்தல் என்றும், இறுதியாக ஒரு வாய்ப்பளிக்குமாறு, சித்தராமையா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவர் 16 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அவர் தனது கட்சியினரோடு பேரணியாக சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பெங்களூர் ஜெய்நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.கே ராமமூர்த்தி, காங்கிரஸ் வேட்பாளரை விட 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை, அவர் தனது தொண்டர்களுடன் பேரணியாக சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்....


Next Story

மேலும் செய்திகள்