செவ்வாய் மீது 50-வது முறையாக பறந்தது.. பட்டய கிளப்பும் இன்ஜீனிட்டி.. உலகை பிரமிக்க வைக்கும் நாசா

x

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், செவ்வாய் கிரத்திற்கு அனுப்பிய பெர்சீவரென்ஸ் ரோவர் கலம் 2021 பிப்ரவரியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன் அடிப்பாகத்தில் இன்ஜீனிட்டி என்ற 122 சென்டி

மீட்டர் நீளம் மற்றும் 52 சென்டி மீட்டர் அகலம் கொண்ட இன்ஜீனிட்டி என்ற ஹெலிகாப்டர் இணைக்கப்பட்டிருந்தது. மிக மிக குறைந்த காற்று அடரத்தி கொண்ட செவ்வாய் கிரகத்தில் 16 அடி உயரத்தில், ஐந்து முறை மட்டும் இதை

பறக்க வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏராளமான முறை அதிக உயரத்தில் பறந்து, எதிர்பார்ப்பை விஞ்சியுள்ளது. ஏப்ரல் 13 அன்று ஐம்பதாவது முறையாக பறந்து சாதனை படைத்துள்ளது.

60 அடி உயரத்தில் பறந்த இன்ஜீனிட்டி ஆயிரத்து 444 அடி தூரத்திற்கு பறந்து, அதில் பொருத்தப்பட்டுள்ள மிக நவீன கேமிராக்கள் மூலம் செவ்வாயின் தரை தளத்தை படம் எடுத்து அனுப்பியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்