தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்.. ஒருபக்கம் சந்தோஷம்..மறுபக்கம் எமோஷனல்.. "கள்ளச்சாராயம் வரும்"பகீர் கிளப்பிய மதுபிரியர்

x

தமிழகம் முழுவதும் இன்று முதல் 500 மதுபான கடைகள் மூடப்படும் என்ற அரசின் அறிவிப்பை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

மதுபான கடைகளை மூட வேண்டும் என்பது பெண்களின் தொடர் கோரிக்கையாகும். மாநிலத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என திமுக அரசு கூறிய நிலையில், விரைந்து செயல்படுத்துமாறு வலியுறுத்தி வந்தார்கள். இதன் தொடர்ச்சியாக 500 மதுபான கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அரசு அறிவித்தது.

தொடர்ச்சியாக பள்ளி- கல்லூரிகள், கோவில்கள் அருகிலிருந்த கடைகளையும், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கடைகள் அடையாளம் காணப்பட்டது. அதன்படி 500 மதுபான கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் கீழ அலங்கத்தில் கடை திறப்பதற்கு முன்பாகவே மதுபான பாரில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்தனர். அவர்களது உடற்கூறாய்வில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை தொடரும் சூழலில் கீழ அலங்கம் மதுபான கடையும் மூடப்படுகிறது.

தமிழக அரசின் இந்த உத்தரவை பொதுமக்கள், கடைக்காரர்கள் என பலரும் வரவேற்றுள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப்பேட்டையில் இருந்த கடை மூடப்படுவதை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஆனால் திருச்சியில் மது குடித்ததை தொடர்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறிய, தச்சங்குறிச்சியில் கடை மூடப்படாதது வருத்தம் அளிப்பதாக தெரிவிக்கிறார்கள்

மறுபுறம் மதுபிரியர்கள் மாறுபட்ட கருத்தை தெரிவிக்கிறார்கள்.. திருச்சி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைக்கு வந்த முதியவர், கடையை அடைத்தால் குடிக்க மாட்டேன் என்றார்....

ஆனால்.. பல மதுபிரியர்கள் தங்கள் கடையுடனான பல வருட பந்தம் பறிபோகிறது எனவும் கடைகள் மூடல் கவலை அளிப்பதாகவும் சொல்கிறார்கள்

இதனால் கள்ளச்சாராயம் வரும் எனவும் கவலையில் ஆழ்கிறார்கள்

இப்போது தமிழகத்தில் 500 மதுபான கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து, மொத்த மதுபான கடைகள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 329-ல் இருந்து 4 ஆயிரத்து 829 ஆக குறைந்துள்ளது. இதையும் படிப்படியாக அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.


Next Story

மேலும் செய்திகள்