500 கிலோ இறைச்சி பதுக்கல்... அழுகிய நிலையில் மீட்பு - அசைவப் பிரியர்களுக்கு அதிர்ச்சி

x

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஓட்டல்களுக்கு விநியோகிப்பதற்காக, பதுக்கி வைத்திருந்த 500 கிலோ கெட்டுபோன பழைய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

கொச்சி களமசேரியில் ஒரு வீட்டில் பழைய இறைச்சி விற்பனை செய்வதாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்த‌து.

இதையடுத்து நகராட்சி சுகாதார துறையினர் ஆய்வு செய்த போது, 2 ஃபிரீசரில் 500 கிலோ கெட்டுப்போன பழைய கோழி இறைச்சிகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பலமுறை உபயோகப்படுத்திய 150 கிலோ எண்ணெய்யும் பறிமுதல் செய்தனர்.

கெட்டுப்போன இறைச்சி வைத்திருந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்