பிளஸ் டூ முடித்து புத்த மதத்தில் இணைந்த 50 மாணவர்கள் - காவி சீருடையில் மாம‌ல்லபுரத்திற்கு வருகை

x

பெங்களூருவில் புத்தபிட்சு பயிற்சி பெறும் புத்த பிச்சுக்களின் காவி சீருடை அணிந்து மாமல்லபுரத்தை சுற்றிப் பார்த்தனர். அருணாச்சல பிரதேசம், மேகாலயா, அசாம், திரிபுரா, மணிப்பூரை சேர்ந்த 50 மாணவர்கள், பிளஸ் டூ முடித்த‌தும், சமூகசேவை ஆற்றும் நோக்கில் இல்லறத்தை துறந்து புத்த மதத்தில் இணைந்துள்ளனர். அவர்கள், கர்நாடகா மாநிலம், பெங்கலூரில் உள்ள ஒரு புத்த மடத்தில், புத்த பிட்சு பயிற்சி பெற்று வருகின்றனர். 20 வயது முதல் 25 வயதுடைய இந்த மாணவர்கள், புத்தமத பாரம்பரிய காவி சீருடை அணிந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள், வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புரதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்தனர். அவர்களுடன் மூத்த புத்தபிச்சுகள் வந்து, மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்