கெட்டுப்போன பிறந்தநாள் கேக் சாப்பிட்டு 5 வயது சிறுமிக்கு வாந்தி மயக்கம்

திருவண்ணாமலையில் பிறந்தநாள் கேக் கெட்டுப் போய் இருந்ததால் ஐந்து வயது சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், கேக்கை விற்ற பேக்கரி முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் பிரபல ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஓட்டலின் பேக்கரியில் ஆதன் என்பவர் தனது 5 வயது குழந்தைக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வாங்கிச் சென்றுள்ளார். இந்த கேக்கை வெட்டி தின்ற குழந்தைக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் ஆதன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, கேக்கை முகர்ந்து பார்த்த போது, கேக் கெட்டுப்போனது தெரிய வந்தது. இந்நிலையில், கெட்டுப்போன கேக்கை விற்ற கடையின் முன் சிறுமியின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com