மதுரை சித்திரை திருவிழாவிற்கு வந்த 5 பேர் மர்மமான முறையில் பலி
மதுரை வைகையாற்றில் அழகர் எழுந்தருளிய ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள தடுப்பணையில், 40 வயது மதிக்கதக்க ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதனையடுத்து வைகை ஆற்றின் கல்பாலம் பகுதியில் மிதந்த 2 சடலங்களை, தீயணைப்புதுறையினர் மீட்டனர். 3 உடல்களும் உடற்கூறு ஆய்விற்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, மதிச்சியம் பகுதியில் மதுரை எம்கே. புரம் பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அதேபோல், மதுரை வடக்கு மாசி வீதி பகுதியை சேர்ந்த சுடலைமுத்து என்ற ஆட்டோ ஓட்டுனர், கூட்ட நெரிசலில் சிக்கி, மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
