தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் - மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

x
  • தமிழகத்தில் சேலம், நெய்வேலி, வேலூர், தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட விமான நிலையங்கள், உதான் திட்டத்தின்கீழ் விமான சேவையை தொடங்க அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
  • தமிழகத்தில் விமானநிலையங்களில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில், காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் கேள்வி எழுப்பியிருந்தார்.
  • இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா, தமிழகத்தில் சென்னை, திருச்சி மதுரை, கோவை தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களை மேம்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
  • சேலம், நெய்வேலி, வேலூர், தஞ்சை, ராமநாதபுரத்தில், உதான் திட்டத்தின் கீழ் விமான சேவைகளைத் தொடங்க அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சேலம் விமான நிலையத்தில் உதான் திட்டத்தில் விமான சேவை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
  • மேலும், 2024ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள ஆயிரம் வழித்தடங்களில் விமான சேவையை தொடங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்