"5 கிலோ மீட்டர் ரூ25 அப்போ.. இப்போ 7 கிலோ மீட்டர் ரூ25" - எப்படி பத்தும் கதறும் ஸ்விக்கி ஊழியர்கள்

x

மதுரையில் ஸ்விக்கி ஊழியர்களின் மொத்த விடுப்பால், டெலிவரி சேவை முடங்கியது.

மதுரை மாநகரில் ஸ்விக்கி நிறுவனத்தின் சார்பில் கூடல்நகர், எல்லிஸ்நகர் ஆகிய பகுதிகளில் 2 வென்டார் அலுவலகங்கள் செயல்பட்டுவருகிறது.

இந்த நிலையில் அலுவலகத்தின் புதிய ஊதிய நடைமுறைகளால், ஊழியர்ளுக்கு திடீரென ஊதியம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அலுவலக மேலாளரிடம் விளக்கம் கேட்டால், பணியில் இருந்து நீக்கி விடுவேன் என மிரட்டுவதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட ஸ்விக்கி ஊழியர்கள். இன்று மொத்த விடுப்பு எடுத்ததால் டெலிவரி சேவை பாதிக்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்