5 தலைமுறை.. பாட்டிக்கு வயது 106 - தலையில் கிரீடம்.. ராணி போல கொண்டாடிய பேரக்குழந்தைகள்..!

x

கோவை அருகே மூதாட்டியின் 106 வது பிறந்தநாளை கிடா வெட்டி விருந்தளித்து குடும்பத்தினர் கொண்டாடினர்.

கோவை, கணுவாய் அருகே புளியமரம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். ஒரு மகள், ஒரு மகன் என தொடங்கிய இவரது வாரிசுகள், தற்போது 5-வது தலைமுறையாக, ஒரு எள்ளு பேரன், ஒரு எள்ளு பேத்தி எனவும், 5 கொள்ளு பேத்திகள், 2 கொள்ளு பேரன் என, மூதாட்டியுடன் சேர்த்து குடும்பத்தினர்14 பேர் உள்ளனர்.1917-ம் ஆண்டு பிறந்த கிருஷ்ணம்மாளின் 106-வது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாட குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.

மூதாட்டிக்கு புதிய துணி எடுத்துகொடுத்து கிரீடம் வைத்து, சந்தனம் மாலை அணுவித்து, மூதாட்டிக்கு பாத பூஜை செய்து அவரிடம் அனைவரும் ஆசிர்வாதம் பெற்றனர்.

தொடர்ந்து உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என சுமார் 200க்கும் மேற்பட்டவர்களை அழைத்து கிடா வெட்டி அனைவருக்கும் விருந்தளித்தனர்.

விழாவிற்கு வந்தவர்களும் மூதாட்டின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்