27 நிமிடத்தில் 48 செய்திகள்... காலை தந்தி செய்திகள்..!

x

மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு குருபகவான் இடம்பெயர்ந்தார். இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள பேரூராண்டார் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இரண்டாவது குரு ஸ்தலமான பேரூராண்டார் கோயிலில், இரவு, 11:27 மணிக்கு மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சி நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி, குருபகவவான், மஞ்சள் நிற பட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசித்தனர்.

குருபெயர்ச்சியையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.வட குருஸ்தலம் என அழைக்கப்படும் சென்னை, திருவொற்றியூர் குரு தட்சிணாமூர்த்தி கோவிலில், குரு பகவானுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு குரு பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டம், வதான்யேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு, தட்சினாமூர்த்தி தங்க கவசத்தில் காட்சியளித்தார். இதில் தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் திருச்செந்தூர் மற்றும் திருவண்ணாமலையிலும், குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

ஈரோடு, கரூர், மதுரை உட்பட தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் நூறு டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 105 புள்ளி 8 டிகிரியாகவும், கரூர் பரமத்தியில் 103 புள்ளி 1 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் வெயில் பதிவானது. மதுரை விமான நிலையம் மற்றும் மாநகர் பகுதியில் 104 புள்ளி 36 டிகிரியாகவும், நாமக்கல்லில் 102 புள்ளி 2 டிகிரியாகவும் வெயில் கொளுத்தியது. சேலத்தில் 104 புள்ளி 54 டிரிகியாகவும், தஞ்சாவூரில் 101 புள்ளி 3 டிகிரியாகவும் பதிவானது.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்