12ம் வகுப்பு பொதுத்தேர்வில் - 47,934 மாணவர்கள் தோல்வி மறுதேர்வு எப்போ? வெளியானது தகவல்

x

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் - 47,934 மாணவர்கள் தோல்வி மறுதேர்வு எப்போ? வெளியானது தகவல்

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி உடனடி தேர்வு நடத்தப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இன்று வெளியான 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 47 ஆயிரத்து 934 மாணவர்கள் தோல்வியைத் தழுவினர். இந்த மாணவர்களுக்கான உடனடி தேர்வு வரும் ஜூன் 19ம் தேதியிலிருந்து நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பாடவாரியான அட்டவணை மிக விரைவில் வெளியாகும் என்றும், ஜூன் மாதத்திற்குள்ளாக தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, ஜூலை முதல் வாரத்தில் ரிசல்ட் வெளியிடப்படும் என்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்