தமிழகத்திற்கு 450 கோடி... மத்திய அரசு அறிவிப்பு

x

தமிழகம், ஆந்திரா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட 22 மாநிலங்களுக்கான மாநில பேரிடர் நிதியாக 7 ஆயிரத்து 532 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கனமழை மற்றும் பேரிடரை முன்னிட்டு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நிதிக்கான, பயன்பாட்டு சான்றிதழுக்காக காத்திருக்காமல், விதிகளை தளர்த்தி உடனடியாக நிதி வழங்கும் வகையில் விடுவிக்கப் பட்டுள்ளது. இதுவரை மாநிலங்களுக்காக 42 ஆயிரத்து 366 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்