விழுப்புரம் அருகே அரசு சொகுசு பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில், 45 பேர் உயிர் தப்பினர்.

x

சென்னையிலிருந்து திருச்சி சென்ற அரசு சொகுசு பேருந்து, விழுப்புரம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற வாகனங்கள் திடீரென நின்றுள்ளன.

இதனால் அரசு பேருந்தின் ஓட்டுனர் உடனடியாக பிரேக் பிடிக்க, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 45 பயணிகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்தின் காரணமாக திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்