400 ஆண்டாக நாகூர் தர்காவில் தொடரும் மத நல்லிணக்கம் : மேளதாளத்துடன் வந்திறங்கிய சீர்வரிசை
நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவில், கந்தூர் விழாவின் இறுதி நாளில் மீனவர்கள் நாகூர் ஆண்டவருக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது. கந்தூரி விழா கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதி தொடங்கியது. இறுதி நாளில், நாகூர் ஆண்டவருக்கு பட்டினச்சேரி மீனவர்கள் சீர்வரிசை எடுத்து வந்து பிரார்த்தனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மீனவர்கள் நாகூர் ஆண்டவருக்கு நாதஸ்வரம் ஒலிக்க தேங்காய், பூ, பழம் உள்ளிட்டவற்றை சீர்வரிசையாக எடுத்து வந்து பிரார்த்தனை செய்தனர்.
Next Story
