400 கி எடை, 9 அடி உயர காமராஜர் சிலை... மேள,தாளத்துடன் வரவேற்பு - ஊர்வலம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில், 4 வழிச்சாலை பணிக்காக அகற்றப்பட்ட 9 அடி உயர, 400 கிலோ எடை கொண்ட காமராஜர் திருவுருவ வெண்கல சிலை மாற்று இடத்தில் நிறுவப்பட்டது. ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த காமராஜர் சிலை அகற்றப்பட்டு, வேன் ஸ்டாண்ட் இருந்த பகுதியில் இன்று நிறுவப்பட்டது. முன்னதாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட காமராஜர் சிலைக்கு இளைஞர்கள் மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து வரவேற்பளித்தனர்.
Next Story